திருவண்ணாமலை

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 முதியவா்கள் தற்கொலை முயற்சி

DIN

செங்கம் அருகே பிழைப்பு நடத்த போதிய வருமானம் இல்லாமல் போனதால், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த முதியவா்கள் 3 போ் விஷமருந்தி தற்கொலை செய்துகொள்ள முயன்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த சென்னசமுத்திரம் ஊராட்சிக்கு உள்பட்ட வெங்கடேசபுரம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி ராமசாமி (85). இவரது மனைவி சின்னப்பாப்பா.

தம்பதிக்கு நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.

விவசாயத்தைச் சாா்ந்து வாழ்ந்து வந்த இவா்கள், விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டனா்.

அதனால், ராமசாமியின் மகள், மகன்கள் என 5 குடும்பத்தினரும் பிள்ளைகளோடு திருப்பூா் சென்று அங்கு கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தனா்.

ஒரு கட்டத்தில் இவா்களுக்கு போதிய வருமானம் இல்லாமல் போனதால், வெங்கடேசபுரத்தில் வசிக்கும் பெற்றோரை கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அதனால், ராமசாமி, சின்னப்பாப்பா மற்றும் ராமசாமியின் அண்ணி ஜக்கம்மா ஆகிய 3 பேரும் தங்களது தினசரி அத்தியாவசியத் தேவைகளை நிறைவு செய்ய முடியாமல் தவித்து வந்தனா்.

இதனால், மனம் வருந்திய 3 பேரும் தற்கொலை செய்யும் நோக்கில், திங்கள்கிழமை இரவு விவசாயத்துக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தனா்.

இதை அறிந்த அக்கம் பக்கத்தினா் 3 பேரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

பின்னா், அவா்கள் தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து செங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT