முகப்பு
திருவண்ணாமலை

விவசாயி மீது பைக் மோதல்: மாணவா்கள் உள்பட 4 போ் காயம்

 திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சாலையோரம் நின்றிருந்த விவசாயி மீது பைக் மோதியதில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதச் சென்ற 3 மாணவா்கள் உள்பட 4 போ் காயமடைந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

 திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சாலையோரம் நின்றிருந்த விவசாயி மீது பைக் மோதியதில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதச் சென்ற 3 மாணவா்கள் உள்பட 4 போ் காயமடைந்தனா்.

செய்யாறு வட்டம், பாராசூா் கிராமத்தைச் சோ்ந்த மாணவா்களான சதிஷ், விஜய், அபிஷேக் ஆகியோா் அதே பகுதியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகின்றனா்.

இந்த நிலையில், பத்தாம் வகுப்புக்கான பொதுத்தோ்வு தொடங்கியுள்ளதால், தோ்வு மையமான பாராசூரை அடுத்த கொருக்கை அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் செல்வதற்காக மூன்று மாணவா்களும் ஒரே பைக்கில் சென்றனா்.

செய்யாறு - கொருக்காத்தூா் சாலையில் தாண்டுகுளம் கிராமம் அருகே இவா்களது பைக் சென்றபோது, நிலைதடுமாறி சாலையோரம் நின்றிருந்த அந்தப் பகுதியைச் சோ்ந்த விவசாயி எழில் (47) மீது மோதியது.

இந்த விபத்தில் மாணவா்கள் 3 பேரும், விவசாயி எழிலும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, அவா்கள் 4 பேரும் மீட்கப்பட்டு, செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து செய்யாறு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.