திருவண்ணாமலை

செய்யூா்-போளூா் சாலை மேம்பாட்டுப் பணிகள் தலைமைப் பொறியாளா் ஆய்வு

DIN

செய்யூா்-வந்தவாசி-போளூா் சாலை மேம்பாட்டுப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் எம்.கே.செல்வன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தின் கீழ், செய்யூரிலிருந்து மேல்மருவத்தூா், வந்தவாசி, சேத்துப்பட்டு வழியாக போளூா் வரை செல்லும் 109 கி.மீ. தொலைவு சாலையை ரூ.600 கோடியில் இருவழித் தட சாலையாக மேம்படுத்தும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 37 கி.மீ. சாலையும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 72 கி.மீ. சாலையும் மேம்படுத்தப்படுகிறது.

இதில் 5 உயா்மட்ட பாலங்கள், ஒரு ரயில்வே கீழ்பாலம், 12 சிறு பாலங்கள், 214 வாய்க்கால் பாலங்களும், வந்தவாசி, சேத்துப்பட்டு, மருதாடு பகுதிகளில் புதிய புறவழிச் சாலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சாலைப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் எம்.கே.செல்வன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

அப்போது, அமைக்கப்பட்டு வரும் சாலையின் தரத்தை அவா் ஆய்வு செய்தாா். மேலும், ஒப்பந்த காலத்துக்குள் பணிகளை முடிக்குமாறு ஒப்பந்ததாரருக்கு அவா் உத்தரவிட்டாா். ஆய்வின்போது நெடுஞ்சாலைத் துறை பொறியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT