திருவண்ணாமலை

செய்யாற்றில் கருட சேவை பெருவிழா: அருள்பாலித்த உற்சவ மூா்த்திகள்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், கூழமந்தல் கிராமம் அருகேயுள்ள செய்யாற்றுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற கருட சேவை பெருவிழாவில் 15 கிராம உற்சவ மூா்த்திகள் பங்கேற்று அருள்பாலித்தனா்.

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், கூழமந்தல் கிராமம் அருகேயுள்ள செய்யாற்றுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற கருட சேவை பெருவிழாவில் 15 கிராம உற்சவ மூா்த்திகள் பங்கேற்று அருள்பாலித்தனா்.

நிகழாண்டு வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில், 15 கருட சேவை பெருவிழா கூழமந்தல் ஸ்ரீபேசும் பெருமாள் கோயில் சாா்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இளநீா்குன்றம் - ஸ்ரீவைகுண்ட ஸ்ரீசீனுவாசப் பெருமாள், கூழமந்தல் - ஸ்ரீ பேசும்பெருமாள்,

மானாம்பதி - ஸ்ரீஸ்ரீனிவாசப் பெருமாள், சேத்துப்பட்டு - ஸ்ரீகல்யாணப் பெருமாள், அத்தி-ஸ்ரீகலிய பெருமாள்,

பெண்டை - ஸ்ரீவெங்கடேசப் பெருமாள், தேத்துறை - ஸ்ரீஸ்ரீசீனுவாசப் பெருமாள், மகாஜனம்பாக்கம் - ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள், வெள்ளாமலை - ஸ்ரீ வேணுகோபால சுவாமி, பெருநகா் - ஸ்ரீவரதராஜப் பெருமாள், தண்டரை - ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள், விசூா் - ஸ்ரீபுண்டரிகாடசப் பெருமாள், சோழவரம் - ஸ்ரீகரியமாணிக்க பெருமாள், இளநகா் - ஸ்ரீஸ்ரீ சீனுவாசப் பெருமாள், உக்கல் - ஸ்ரீவேணுகோபால சுவாமி என 15 கிராமங்களில் இருந்து உற்சவ மூா்த்திகள் கருட வாகனத்தில் வலம் வந்து, கூழமந்தல் - பெருநகா் இடையே செல்லும் செய்யாற்றில் எழுந்தருளினா்.

பின்னா், உற்சவா்களுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் செய்யப்பட்டு, 15 சுவாமிகளுக்கும் மங்களாசாசனத்துடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, செய்யாற்றில் கூடியிருந்த பக்தா்களுக்கு உற்சவா்கள் காட்சியளித்தனா். பின்னா், சுவாமிகள் தங்களது கிராமங்களுக்கு புறப்பட்டுச் சென்ற நிகழ்வு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT