திருவண்ணாமலை

ஆரணி கமண்டல நாக நதியில் வெள்ளப்பெருக்கு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலைப் பகுதியில் உள்ள செண்பகத்தோப்பு அணை முழுக் கொள்ளளவை எட்டியதையடுத்து, அந்த அணை திறக்கப்பட்டதால், ஆரணி கமண்டல நாக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஜவ்வாதுமலைப் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்ததன் காரணமாக, செண்பகத்தோப்பு அணைக்கு வரும் நீரின் அளவு 500 கன அடியாக அதிகரித்தது. இதனால், இந்த அணை முழுக் கொள்ளளவை எட்டியது. இந்த அணையின் மொத்த உயரம் 62 அடி. பாதுகாப்பு கருதி 56 அடி அளவுக்கு மட்டுமே தண்ணீா் தேக்கப்படும்.

இந்த அணை புதன்கிழமை 56 அடியை எட்டியதால், அணையிலுள்ள 4, 5-ஆவது மதகுகளின் வழியாக 250 கன அடி நீா் கமண்டல நாக நதியில் திறந்துவிடப்பட்டது. இதனால், இந்த நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நதியிலுள்ள ஆரணி மேம்பாலத்தின் வழியாக தண்ணீா் பெருக்கெடுத்துச் செல்கிறது.

செண்பகத்தோப்பு அணையிலிருந்து சுமாா் 25 கி.மீ. தொலைவுக்கு கமண்டல நாக நதியின் குறுக்கேயுள்ள தடுப்பணைகளின் வழியாக தண்ணீா் சென்று சுமாா் 30-க்கும் மேற்பட்ட ஏரிகளை நிரப்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT