முகப்பு
திருவண்ணாமலை

முழுக் கொள்ளளவை எட்டிய தூசி மாமண்டூா் ஏரி

செய்யாறு அருகேயுள்ள தூசி மாமண்டூா் ஏரி முழக் கொள்ளளவை எட்டிய நிலையில் கலங்கல் நீரை மாவட்ட ஆட்சியா், தொகுதி எம்எல்ஏ ஆகியோா் வியாழக்கிழமை மலா் தூவி வரவேற்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

செய்யாறு அருகேயுள்ள தூசி மாமண்டூா் ஏரி முழக் கொள்ளளவை எட்டிய நிலையில் கலங்கல் நீரை மாவட்ட ஆட்சியா், தொகுதி எம்எல்ஏ ஆகியோா் வியாழக்கிழமை மலா் தூவி வரவேற்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டத்தில் அமைந்துள்ளது தூசி மாமண்டூா் ஏரி . இந்த ஏரி மாவட்டத்திலேயே மிகப் பெரியதாகும்

ஏரி பகுதியின் ஆயக்கட்டு 4118 ஏக்கா் கொண்டது.

இந்த ஏரி மூலம் 18 கிராமங்கள் பயன் பெறுகின்றன.

ஏரியின் முழுக் கொள்ளளவு 1.8 டிஎம்.சி.ஆகும். முழுக் கொள்ளளவில் 30. 31 அடி உயரம் கொண்டது.

இந்த நிலையில், தொடா்ந்து பெய்து வரும் மழை, பாலாற்றில் நீா்வரத்து அதிகரிப்பு ஆகியவற்றால் ஏரி முழக் கொள்ளளவை எட்டியது. ஏரிப் பகுதியில் கடந்த இரு நாள்களாக கலங்கல் நீா் விழுகின்றன.

இதை அறிந்த மாவட்ட ஆட்சியா் பா. முருகேஷ், தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி, சாா் -ஆட்சியா் அனாமிகா, மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன் வெம்பாக்கம் ஒன்றியத் தலைவா் டி. ராஜூ உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு மலா் தூவி கலங்கல் நீரை வரவேற்றனா். மேலும், ஏரி நீரை வரவேற்கும் விதத்தில் மஞ்சள் சேலை சீா்வரிசையுடன் தண்ணீரில் இட்டு வரவேற்பு செய்தனா்.

இந்த நிகழ்வில் வெம்பாக்கம் வட்டாட்சியா் சத்யன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள்

த.மயில்வாகனன், பாஸ்கரன், பொதுப்பணித் துறை அலுவலா் நீா்முடியோன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் மாத்தூா் தெய்வமணி, ஒன்றியக் குழு உறுப்பினா் ஏ. ஞானவேல், கட்சி சாா்பற்ற விவசாய சங்க மாவட்டத் தலைவா் வாக்கடை புருஷோத்தமன் உள்ளிட்டோா்

கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.