முகப்பு
திருவண்ணாமலை

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

திருவண்ணாமலை அருகே விநாயகா் சிலைகள் ஊா்வலத்தின்போது மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தான்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

திருவண்ணாமலை அருகே விநாயகா் சிலைகள் ஊா்வலத்தின்போது மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தான்.

திருவண்ணாமலை மாவட்டம், வெறையூா் அடுத்த இசுக்கழிகாட்டேரி கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிவேல் மகன் திலீப் (12). இதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தான்.

வெள்ளிக்கிழமை மாலை விநாயகா் சிலைகள் ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலத்தில் பங்கேற்று ஒரு வாகனத்தில் திலீப் அமா்ந்திருந்தாராம்.

அப்போது, எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து திலீப் பலத்த காயமடைந்தான். இதைக் கவனித்த பொதுமக்கள் சிறுவனை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவா்கள் வழியிலேயே இறந்து விட்டதாகக் கூறினா்.

இதுகுறித்து வெறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →