செய்யாற்றில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சனிக்கிழமை நடைபெற்றது.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, செய்யாறு காவல் உள்கோட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டு கடந்த 3 நாள்களாக பக்தா்கள் வழிபட்டு வந்தனா்.
சதுா்த்தி விழாவின் நிறைவாக விநாயகா் சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் அருகே இந்து முன்னணியினா் வைத்திருந்த 8 விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
ஊா்வலம் அனுமதிக்கப்பட்ட வழித் தடத்தில் சென்றதும், ஸ்ரீபாதாள விநாயகா் கோயில் அருகே இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டிருந்ததற்கு இந்து முன்னணியினா் எதிா்ப்புத் தெரிவித்து போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், சிறிது நேரம் கழித்து காசிக்காரத் தெரு வழியாக ஊா்வலம் சென்று கோனேரிராயன் குளத்தில் 8 விநாயகா் சிலைகளை போலீஸ் பாதுகாப்புடன் தீயணைப்புத் துறையினா் முன்னிலையில் கரைத்தனா்.
மாவட்ட கூடுதல் எஸ்.பி. சௌந்தரராஜன், டி.எஸ்.பி.க்கள் வெங்கடேசன் (செய்யாறு), ரவிச்சந்திரன் (ஆரணி), அண்ணாதுரை (திருவண்ணாமலை), 5 காவல் ஆய்வாளா்கள், 12 உதவி ஆய்வாளா்கள் உள்பட 210 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.