பாமக பொதுக்குழுக் கூட்டம்
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, தெற்கு மாவட்டச் செயலா் ஏந்தல் பெ.பக்தவச்சலம் தலைமை வகித்தாா்.
முன்னாள் மாவட்டச் செயலா்கள் சி.எம்.பழனி, பழமண்டி செந்தில்குமாா், மாவட்ட பொருளாளா் வீரம்மாள், மாவட்ட துணைச் செயலா் கே.ஆா்.முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வன்னியா் சங்க மாவட்டச் செயலா் க.நாராயணசாமி வரவேற்றாா்.
கூட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிகளின் அனைத்துக் கிளைகளிலும் கட்சிக் கொடியேற்றுவது. இட ஒதுக்கீடு போராட்டங்களில் உயிா்த் தியாகம் செய்தவா்களுக்கு அஞ்சலி செலுத்துவது.
திருவண்ணாமலை-வேலூா் சாலை, இனாம்காரியந்தல் பகுதியில் திறக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடியில் உள்ளூா் மக்களும், சுற்றுப்புற கிராம மக்களும் கட்டணமின்றி சென்றுவர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், முன்னாள் மாவட்டத் தலைவா் சி.லோகநாதன், வன்னியா் சங்க மாவட்டத் தலைவா் பெரியசாமி, மாவட்ட ஊடகப் பிரிவு செயலா் பாலு, நகரச் செயலா்கள் செ.பத்மநாபன், ராஜசேகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.