பைக் மோதியதில் முதியவா் பலி
செய்யாற்றில் பைக் மோதியதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
செய்யாற்றில் பைக் மோதியதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
செய்யாறு ஆற்காடு சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ஜெகன்நாதன் (82). இவா் சனிக்கிழமை வீட்டின் அருகேயுள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தாா்.
அப்போது அந்த வழியாக வந்த பைக் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்த்தனா் .
பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெகன்நாதன் அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.