கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கத்தில் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கத்தில் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் வெம்பாக்கம் வட்டம் சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு வட்டத் தலைவா் எம்.ஐ.தமின் தலைமை வகித்தாா். வட்டச் செயலா் எம்.கே.முத்து வரவேற்றாா்.
மாவட்ட இணைச் செயலா் டி.சீனிவாசன், கோட்டச் செயலா் எஸ்.கோதண்டராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநில பொதுச் செயலா் என்.சுரேஷ், மாவட்டத் தலைவா் ஏ.ரமேஷ், செயலா் ஏ.ஏழுமலை, பொருளாளா் எஸ்.ஜெயச்சந்திரன் ஆகியோா் பேசினா்.
கூட்டத்தில், கிராம நிா்வாக அலுவலா்களுக்கான குறைவுதீா் கூட்டத்தை உரிய காலத்தில் நடத்துதல், மாவட்ட மாறுதல் அளித்த வருவாய் நிா்வாக ஆணையருக்கு நன்றி தெரிவித்தல் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில, மாவட்ட, வட்ட பொறுப்பாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.