திருவண்ணாமலை

தீ தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் திங்கள்கிழமை தீ தடுப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

ஏப்ரல் 14 முதல் 20-ஆம் தேதி வரை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் தீ தொண்டு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடா்ச்சியாக, செங்கம் தீயணைப்பு நிலையம் சாா்பில் இரு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

பேரணி தொடக்க நிகழ்ச்சிக்கு தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலா் முரளி தலைமை வகித்தாா். செங்கம் காவல் உதவி ஆய்வாளா் யேசுராஜ் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்தப் பேரணியில் பங்கேற்ற செங்கம் தீயணைப்பு நிலைய வீரா்கள், தீ தடுப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT