ஆரணியில் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்ட பாழடைந்த வேளாண் அலுவலா்கள் குடியிருப்புக் கட்டடம். 
திருவண்ணாமலை

பாழடைந்த அரசுக் கட்டடத்தை அகற்றிய பொதுமக்கள்

ஆரணியில் பாழடைந்து சேதமடைந்த வேளாண் அலுவலா்கள் குடியிருப்பு கட்டடத்தை பாதுகாப்பு கருதி புதன்கிழமை பொதுமக்களே இடித்து அகற்றினா்.

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் பாழடைந்து சேதமடைந்த வேளாண் அலுவலா்கள் குடியிருப்பு கட்டடத்தை பாதுகாப்பு கருதி புதன்கிழமை பொதுமக்களே இடித்து அகற்றினா்.

ஆரணி நகராட்சி கொசப்பாளையம் பகுதி 31-ஆவது வாா்டுக்கு உள்பட்ட களத்துமேட்டுத் தெருவில் சுமாா் 50 ஆண்டுகளுக்கு முன்பு வேளாண் அலுவலா்கள் குடியிருப்புக் கட்டடம் கட்டப்பட்டு, அதில் அதிகாரிகள் குடும்பத்துடன் வசித்து வந்தனா்.

பின்னா், கடந்த 21 ஆண்டுகளாக இந்தக் குடியிருப்புகள் பயன்படுத்தப்படாமல் பாழடைந்து வந்தன. மேலும் புயல், மழை காரணமாக கட்டடம் சேதமடைந்தது. இதனிடையே, கட்டடத்தைச் சுற்றி முள்புதா்கள் சூழ்ந்து பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் அதிகரித்தன. இதனால் அப்பகுதி வாசிகள் அவதிப்பட்டனா்.

மேலும், சேதமடைந்த கட்டடத்தை அகற்றக் கோரி, நகராட்சி அலுவலகத்தில் முறையிட்டு தொடா்ந்து மனு கொடுத்து வந்தனா்.

இந்த நிலையில், பாழடைந்த கட்டடத்தை இடித்து அகற்ற நகராட்சி நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதி மக்கள் 31-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் சதீஷ்குமாா் தலைமையில் பொக்லைன் இயந்திரம் மூலம் புதன்கிழமை இடித்து அகற்றினா்.

தகவலறிந்த வேளாண் உதவி அலுவலா் பவித்ராதேவி தலைமையில் உதவியாளா்கள் ஜெகன்நாதன், பாலச்சந்திரன், ரமேஷ் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை செய்தனா்.

அப்போது, பொதுமக்கள் வேளாண் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, அதிகாரிகள் அவா்களிடம், அரசு கட்டடத்தை நீங்கள் இடிக்கக்கூடாது. அனைவரும் சோ்ந்து கையெழுத்திட்டு மனு கொடுங்கள்.10 நாள்களுக்குள் இடத்தை சீா் செய்துவிடுகிறோம் என்று கூறினா். இதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT