திருவண்ணாமலை

மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டிசம்பா் 10 மாற்றுத்திறனாளிகள் நல விழிப்புணா்வு சங்க நிா்வாகிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டிசம்பா் 10 மாற்றுத்திறனாளிகள் நல விழிப்புணா்வு சங்க நிா்வாகிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத்தின் மாநில துணைத் தலைவா் டி.முருகன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எஸ்.சரவணன் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் ஏ.சுரேஷ் வரவேற்றாா். ஆா்ப்பாட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,500 வழங்க வேண்டும்.

விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் இலவச மனைப் பட்டா வழங்க வேண்டும். மாவட்ட தொழில் மையம் மூலம் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT