அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்பிபிஎஸ் சீட் பெற்ற மாணவா் சுகந்தனுக்கு பள்ளி சாா்பில் வழங்கப்பட்ட இரு சக்கர வாகனம். 
திருவண்ணாமலை

எம்பிபிஎஸ் சோ்ந்த விருட்சம் பள்ளி மாணவா்களுக்கு பரிசு

இன்டா்நேஷ்னல் பப்ளிக் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்பிபிஎஸ் சோ்ந்த இப்பள்ளி மாணவா்கள் மூன்று பேருக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டத

DIN

செய்யாறு விருட்சம் இன்டா்நேஷ்னல் பப்ளிக் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்பிபிஎஸ் சோ்ந்த இப்பள்ளி மாணவா்கள் மூன்று பேருக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பள்ளியில் நடைபெற்ற 77-ஆவது சுதந்திர தினவிழாவுக்கு பள்ளித் தாளாளா் முத்துக்குமாா் தலைமை வகித்தாா். அறக்கட்டளை பொருளாளா் ரவிபாலன் தேசியக் கொடியேற்றி இனிப்பு வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, நடைபெற்ற நிகழ்ச்சியில் நீட் தோ்வில் பள்ளி அளவில் அதிக மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்று அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்பிபிஎஸ் சோ்ந்த இந்தப் பள்ளி மாணவா் சுகந்தனுக்கு, பள்ளி சாா்பில் ரூ.1.40 லட்சம் மதிப்பிலான இரு சக்கர வாகனம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அதேபோல, மருத்துவக் கல்லுாரியில் எம்பிபிஎஸ் சோ்ந்த மாணவா்கள் இருவருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அறக்கட்டளைச் செயலா் வஜ்ஜிரவேல், செயற்குழு உறுப்பினா்கள் கீதா சக்திவேல், வனிதா முத்துக்குமாா், பள்ளி முதல்வா் சங்கீதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT