‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம்: 404 மனுக்கள் அளிப்பு
செய்யாறில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 404 மனுக்கள் அளிக்கப்பட்டது.
செய்யாறில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 404 மனுக்கள் அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் 13, 16,19, 20, 21, 22 ஆகிய வாா்டு பகுதிகளுக்காக 3-ஆம் கட்ட ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் மண்டித்தெருவில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
முகாமுக்கு, திருவத்திபுரம் நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல் தலைமை வகித்தாா். செய்யாறு எம்.எல்.ஏ. ஒ.ஜோதி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன், நகரச் செயலாளா் கே.விஸ்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆணையாளா் (பொ) கே.பி.குமரன் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக செய்யாறு சாா்-ஆட்சியா் பல்லவிவா்மா பங்கேற்று முகாமை தொடங்கி வைத்தாா்.
முகாமில், வாா்டு மக்கள் சாா்பில் வருவாய்த்துறைக்கு 286 மனுக்களும், மின்சாரத்துறைக்கு 38 மனுக்களும், நகராட்சிக்கு 43 மனுக்கள் உள்பட மொத்தம் 404 மனுக்கள் அளிக்கப்பட்டது.
விழாவில், வட்டாட்சியா் முரளி, நகா்மன்ற துணைத் தலைவா் பேபிராணி பாபு, ஓன்றிய குழு உறுப்பினா் வி.ஏ.ஞானவேல், முன்னாள் நகா்மன்றத் தலைவா் ஏ.என்.சம்பத், ஒன்றிய செயலாளா்கள் ஜேசிகே.சீனிவாசன், எம்.தினகரன் மற்றும் நகராட்சிக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.