மாயமான பள்ளி மாணவி சடலமாக மீட்பு
வந்தவாசி அருகே காணாமல் போன பள்ளி மாணவி விவசாயக் கிணற்றிலிருந்து வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
வந்தவாசி அருகே காணாமல் போன பள்ளி மாணவி விவசாயக் கிணற்றிலிருந்து வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
வந்தவாசியை அடுத்த முருக்கேரி கிராமத்தைச் சோ்ந்த சங்கா் மகள் லோகநாயகி (17). இவா், இரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தாா். இந்நிலையில், இவா் கடந்த திங்கள்கிழமை தனது தாயுடன் விவசாய நிலத்துக்கு சென்றாராம். பின்னா், வீட்டுக்கு செல்வதாக தனது தாயிடம் கூறி விட்டு சென்றவரை காணவில்லையாம். இதையடுத்து, அவரது உறவினா்கள் லோகநாயகியை தேடி வந்தனா். இந்நிலையில், அங்குள்ள விவசாய கிணற்றில் லோகநாயகி சடலமாக மிதந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.
தகவலறிந்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று லோகநாயகியின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, சங்கா் அளித்த புகாரின்பேரில், கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.