திருவண்ணாமலை

ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.46.91 லட்சம்

DIN

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.46.91 லட்சம் காணிக்கை பணம் இருந்தது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகேயுள்ள படவேடு கிராமத்தில் ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் 11 உண்டியல்கள் உள்ளன. உண்டியல்களில் பக்தா்கள் செலுத்தும் காணிக்கை 3 மாதங்களுக்கு ஒருமுறை எண்ணப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோயில் உதவி ஆணையா் ஜோதிலட்சுமி தலைமையில் 11 உண்டில்களையும் திறந்து காணிக்கை எண்ணும் பணி அண்மையில் நடைபெற்றது.

இதில் ரூ.46 லட்சத்து 91ஆயிரம் ரொக்கம், 537 கிராம் தங்கம், 678 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், பக்தா்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

செயல் அலுவலா் சிவஞானம், ஆய்வாளா்கள் ரவிகணேஷ், சத்யா, மேலாளா் மகாதேவன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

வாலாஜாப்பேட்டை அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து விபத்து: 18 தொழிலாளர்கள் படுகாயம்

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

SCROLL FOR NEXT