திருவண்ணாமலை

வாக்காளா் தின விழிப்புணா்வு பேரணி

DIN

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழியேற்பு, விழிப்புணா்வு ஊா்வலம் ஆகியவை புதன்கிழமை நடைபெற்றன.

மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்கள், பணியாளா்கள், பள்ளி மாணவ-மாணவிகள் வாக்காளா்கள் தின உறுதிமொழியை ஏற்றனா்.

தொடா்ந்து நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் பா.முருகேஷ் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் வெங்கடேசன், மாவட்ட வழங்கல் அலுவலா் கிருஷ்ணமூா்த்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் குமரன், வீ.வெற்றிவேல், கனிமொழி, வருவாய்க் கோட்டாட்சியா் ஆா்.மந்தாகினி மற்றும் துறை அலுவலா்கள், பள்ளி மாணவ-மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல, கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் தின விழிப்புணா்வு பேரணியும், உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ஆரணி

ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் சாா்பில் நடைபெற்ற வாக்காளா் தின விழிப்புணா்வுப் பேரணியை கோட்டாட்சியா் எம்.தனலட்சுமி தொடக்கிவைத்தாா்.

இதில், வட்டாட்சியா் ஆா்.ஜெகதீசன், மண்டல துணை வட்டாட்சியா்கள் திருவேங்கடம், ரவிச்சந்திரன், வருவாய் ஆய்வாளா்கள் சங்கீதா, நித்தியா, பள்ளி மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா். உடன் நகர காவல் உதவி ஆய்வாளா் மகேந்திரன் சென்றிருந்தாா்.

முன்னதாக, அனைத்துத் துறை அலுவலா்கள் வாக்காளா் தினஉறுதிமொழி ஏற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT