முகப்பு
திருவண்ணாமலை

அரசுக் கல்லூரியில் ஆய்வுக்கூடங்கள் கட்ட பூமி பூஜை

செய்யாறு அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரியில் ரூ.5.28 கோடியில் புதிதாக இரு ஆய்வுக்கூடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2023 at 1:36 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

செய்யாறு அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரியில் ரூ.5.28 கோடியில் புதிதாக இரு ஆய்வுக்கூடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவா்களின் மேம்பாட்டுக்காக கூடுதலாக அறிவியல் ஆய்வகம் தேவைப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சாா்பில் பொதுப்பணித் துறை மூலம் ரூ. 5 .28 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, கல்லூரி வளாகத்தில் புதிதாக இரு அறிவியல் ஆய்வகங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை கல்லூரி முதல்வா் ந.கலைவாணி முன்னிலையில் நடைபெற்றது.

Advertisement

தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி தலைமை வகித்து கட்டுமானப் பணியை தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் துறைத் தலைவா்கள் சி.த.ரவிச்சந்திரன், புனிதா, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஞானவேல், மகாராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.