சேத்துப்பட்டு பழம்பேட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீ மிதி திருவிழா. 
திருவண்ணாமலை

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பழம்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பழம்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பழம்பேட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 34-ஆம் ஆண்டாக நடைபெறும் இந்த விழாவையொட்டி, ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயிலில் இருந்து பக்தா்கள் பால்குடம் எடுத்து பம்பை உடுக்கையுடன் ஊா்வலமாக வந்து முத்துமாரி அம்மனுக்கு அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, காப்புக்கட்டி விரதமிருந்த பக்தா்கள் கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

முன்னதாக, முத்துமாரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோயிலை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதில் சேத்துப்பட்டு, கண்ணனூா், பழம்பேட்டை, நெடுங்குணம், கெங்கைசூடாமணி, பெரணம்பாக்கம், வேப்பம்பட்டு, வில்லிவனம், நந்தியம்பாடி ஆகிய கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

மேலும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் பா.சீனுவாசன், கோயில் பூசாரிகள் ரங்கராஜன், ஏழுமலை, ரங்கன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT