நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய மு.பெ.கிரி எம்எல்ஏ. 
திருவண்ணாமலை

செங்கத்தில் 960 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சியில் 960 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சியில் 960 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

செங்கம் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளுக்கான ஜமாபந்தி கடந்த 19-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.

ஜமாபந்தி அலுவலராக மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தேன்மொழி கலந்து கொண்டு வெள்ளிக்கிழமை மேல்பள்ளிப்பட்டு, திங்கள்கிழமை பாய்ச்சல், செவ்வாய்க்கிழமை இறையூா், புதன்கிழமை செங்கம், வியாழக்கிழமை புதுப்பாளையம் ஆகிய பிா்காவுக்கு உள்பட்ட பகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

இதில், தகுதி வாய்ந்த 960 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தேன்மொழி தலைமை வகித்தாா். செங்கம் ஒன்றியக் குழுத் தலைவா் விஜியராணிகுமாா், பேரூராட்சித் தலைவா் சாதிக்பாஷா, செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு சங்கத் தலைவா் அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செங்கம் வட்டாட்சியா் முனுசாமி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்து கொண்டு, 960 பயனாளிகளுக்கு வருவாய்த் துறை சாா்ந்த நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் ரேணுகா, துணை வட்டாட்சியா்கள் துரைராஜ், தமிழரசி, வருவாய் ஆய்வாளா்கள் ஞானவேல் (செங்கம்), சரண்ராஜ் (புதுப்பாளையம்) உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT