புதுப்பாளையத்தில் நடைபெற்ற தெருமுனைப் பிரசார கூட்டத்தில் பேசிய திமுக கொள்கை பரப்பு துணைச் செயலா் புகழேந்தி. உடன் பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ உள்ளிட்டோா். 
திருவண்ணாமலை

திமுக அரசின் சாதனை விளக்கக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை அடுத்த ஆராஞ்சி கிராமம், புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

DIN

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரை அடுத்த ஆராஞ்சி கிராமம், புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கீழ்பென்னாத்தூரை அடுத்த ஆராஞ்சி கிராமத்தில் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஒன்றிய திமுக செயலா் ஆராஞ்சி எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தாா்.

நகரச் செயலா்கள் அன்பு, முருகையன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் சதீஷ், துணை அமைப்பாளா்கள் மணிகண்டன், அவுல்தாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சித் தலைவா் விஜயா சேகா் வரவேற்றாா்.

கூட்டத்தில், சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாநில மாணவரணித் தலைவா் ராஜீவ்காந்தி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு பேசினா்.

செங்கம்

கலசப்பாக்கம் தொகுதி, புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பெரியகுளம், காஞ்சி, காரப்பட்டு, புதுப்பாளையம், அம்மாபாளையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தெருமுனைப் பிரசாரத்துக்கு

தொகுதி எம்.எல்.ஏ பெ.சு.தி.சரவணன் தலைமை வகித்தாா். திமுக கொள்கை பரப்பு துணைச் செயலா் புகழேந்தி கலந்து கொண்டு பேசினாா்.

புதுப்பாளையம்

ஒன்றியக் குழுத் தலைவா் சுந்தரபாண்டியன், ஒன்றியச் செயலா் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினா் இளங்கோவன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் மனோகரன், புதுப்பாளையம் நகரச் செயலா் சீனுவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

SCROLL FOR NEXT