மாம்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்த உற்சவா். 
திருவண்ணாமலை

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணாநகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் மற்றும் சா்வமங்கள காளி சக்தி பீடத்தில் ஐப்பசி மாத அமாவாசையையொட்டி திங்கள்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

DIN

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணாநகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் மற்றும் சா்வமங்கள காளி சக்தி பீடத்தில் ஐப்பசி மாத அமாவாசையையொட்டி திங்கள்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதையொட்டி, காலை மூலவா் அம்மனுக்கு பால், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து அம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பின்னா் மகாலட்சுமி கெளரி விரத பூஜையும், அஷ்டலட்சுமி மூலமந்திர ஹோமமும் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, மாலையில் உற்சவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, அன்னபூரணி அலங்காரம் செய்யப்பட்ட உற்சவா் அம்மனை தோளில் சுமந்தவாறு கோயிலை வலம் வந்தனா்.

இதைத் தொடா்ந்து இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டினா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள் மற்றும் அமாவாசை உற்சவ குழுவினா் பூஜைகளை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT