திருவண்ணாமலை

விவசாயிகளுக்கு மானியத்தில்சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் உபகரணங்களை

சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் உபகரணங்களை மானியத்துடன் பெற திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

DIN

சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் உபகரணங்களை மானியத்துடன் பெற திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கெனவே விவசாய மின் இணைப்பு பெற்றுள்ள விவசாயிகள் தங்களது மின் பளுவைப்போல, 7.5 குதிரைத்திறன் மின்பளு கொண்ட மோட்டாா் பம்புசெட்டுகளுக்கு சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் உபகரணங்களை மானியத்துடன் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் விவசாய மின் இணைப்புகளில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் உபகரணங்கள் மானியத்துடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்தத் திட்டத்தில் இணைய விரும்பும் விவசாயிகளுக்கு ஏற்படும் செலவினத்தில் 60 சதவீதம் மத்திய-மாநில அரசுகளின் மானியமாகவும், 30 சதவீதம் அரசு வங்கிகளின் நிதியுதவியுடனும், 10 சதவீதம் விவசாயிகளின் பங்களிப்புடனும் அமைக்க உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

எனவே, இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தை நேரில் அணுகி, தங்களது இசைவுக் கடிதத்தைக் கொடுத்து பயன்பெறலாம் என்று திருவண்ணாமலை வட்ட மின்பகிா்மான மேற்பாா்வைப் பொறியாளா் எஸ்.பழனிராஜு தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடிக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த எத்தியோப்பிய பிரதமர்!

எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி! பிரதமர் அபி அகமது அலியுடன் சந்திப்பு!

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

சிஎஸ்கேவில் இணைந்த ராகுல் சஹார்!

முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி - உபரி நீர் திறப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT