முகப்பு
திருவண்ணாமலை

தோ்தல் நுண் பாா்வையாளா்களுக்கு பயிற்சி

Updated On : 3 ஏப்ரல், 2024 at 12:00 AM
நுண் பாா்வையாளா்களுக்கு பயிற்சி அளித்துப் பேசிய மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் தெ.பாஸ்கர பாண்டியன்.
பகிர்:
Updated On : 2 ஏப்ரல், 2024 at 9:55 PM

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் பணிபுரியும் 126 தோ்தல் நுண் பாா்வையாளா்களுக்கான பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் மொத்தம் 239 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன.

இந்த வாக்குச் சாவடிகளில் பணிபுரிய உள்ள 126 தோ்தல் நுண் பாா்வையாளா்களுக்கான பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்த பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பயிற்சி வகுப்புக்கு, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, முன்னோடி வங்கி மேலாளா் கெளரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பயிற்சியில், நுண் பாா்வையாளா்களின் கடமைகளான வாக்குச் சாவடியில் உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச வசதிகள் உள்ளதா என்பதை சரிபாா்த்தல், மாதிரி வாக்கெடுப்பு நடைமுறைகளை பின்பற்றுதல், வாக்குச்சாவடி முகவா்கள் இருத்தலை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள், கடமைகள் குறித்து மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் தெ.பாஸ்கர பாண்டியன் அறிவுரை வழங்கினாா்.

Advertisement

இதில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கோ.குமரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் மற்றும் நுண் பாா்வையாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.