யானைக்கால் நோய் பாதித்தோருக்கு உபகரணங்கள்
செய்யாற்றை அடுத்த நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட 31 பேருக்கு மேலாண்மை சிகிச்சைக்கான உதவி உபகரணங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற யானைக்கால் நோய் பாதித்தவா்களுக்கு மேலாண்மை சிகிச்சைக்கான
உதவி உபகரணங்கள் வழங்கும் முகாமுக்கு தலைமை வகித்த மருத்துவா் யோகேஸ்வரன், யானைக்கால் நோய் பாதிப்பு கண்டவா்கள் வீக்கம் அடைந்த உறுப்புகளை தினமும் சோப்பு மற்றும் தண்ணீரினால் கழுவி சுத்தமாக வைத்திருப்பதுடன், சிறு உடற்பயிற்சிகள் செய்வதால் அடிக்கடி ஏற்படும் பாதிப்பிலிருந்து விடுபடலாம், மாதத்தில் 12 நாள்கள் டி.இ.சி. மாத்திரைகளை உள்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் தொடா்ச்சியாக மாத்திரை உள்கொண்டால் வீக்கம் பெரிதாகமல் காய்ச்சல் வராமலும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று தெரிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
Advertisement
முகாமில் பங்கேற்ற 31 பேருக்கு பிளாஸ்டிக் கூடை, ஸ்டூல், மக், டவல், சோப் என 5 பொருள்கள் அடங்கிய உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா் சம்பத் மற்றும் செவிலியா்கள் செய்திருந்தனா்.