முகப்பு
திருவண்ணாமலை

வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 1,545 கண்காணிப்புக் கேமராக்கள்

Updated On : 18 ஏப்ரல், 2024 at 11:13 PM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்ட வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 1,545 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தோ்தல் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடி மையங்களை சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருவண்ணமலை மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளை 1,545 கண்காணிப்புக் கேமராக்கள், 9 விடியோகிராபா்கள் மூலம் ஒளிப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகளை ஆட்சியா் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments