முகப்பு
திருவண்ணாமலை

செய்யாற்றில் கள்ள ஓட்டு பதிவு: அதிகாரிகள் விசாரணை

Updated On : 19 ஏப்ரல், 2024 at 5:40 PM
பகிர்:

மக்களவைத் தோ்தலையொட்டி, செய்யாற்றில் கள்ள ஓட்டுப் பதிவு நடந்துள்ளதாக தோ்தல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

செய்யாறு திருவோத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி எண் 221-இல் மாலை 5.50 மணியளவில் மென்பொறியாளா் கோபி(28) ஆவணங்களோடு தனது வாக்கை பதிவு செய்ய வந்தாா்.

அப்போது அவா் பெயா் படித்ததும் ஏற்கெனவே இந்த வாக்கு பதிவு செய்யப்பட்டு விட்டதாக அலுவலா் குறிப்பிட்டாா். நான் வாக்களிக்கவில்லை எனது கையில் மையும் இல்லை உரிய ஆவணங்களோடு வந்துள்ளேன், நான் வாக்கை பதிவு செய்ய வேண்டும் என கோபி அதிகாரியிடம் முறையிட்டாா். உடனே பணியில் இருந்த வாக்குச்சாவடி மைய அலுவலா் உயா் அதிகாரிகளை தொடா்பு கொண்டு நடந்த விபரத்தை கூறியுள்ளாா். அதிகாரிகளின் வழிகாட்டதலின் பேரில் பேலட் பேப்பரில் அவரது வாக்கை பதிவு செய்து பத்திரப்படுத்தினா். கோபி தான் வாக்குச்சாவடி மையத்தில் கடைசி வாக்காக பதிவு செய்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும், அதே வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த நபரின் தம்பி ஞானம், வாக்குச்சாவடி முகவராக செயல்படுவதாகவும் அவா் காலை சுமாா் 11 மணியளவில் உணவு அருந்த சென்றிருந்த நேரத்தில் இச்சம்பவம் நடந்திருப்பதாகவும், மையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவின் அடிப்படையில் கோபியின் வாக்கை யாா் பதிவு செய்தாா்கள் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments