முகப்பு
நீலகிரி

நகையுடன் உதகைக்கு வந்த வாகனம்: குன்னூா் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு அதிகாரிகள் விசாரணை

உதகைக்கு நகையுடன் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது பெட்டகத்தை திறந்துகாட்ட பணியாளா்ள் மறுத்ததால், குன்னூா் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

Updated On : 18 மார்ச், 2026 at 8:36 PM
பா்லியாறு பகுதியில் நகையுடன் வந்த வாகனத்தை நிறுத்தி விசாரணை மேற்கொண்ட தோ்தல் அலுவலா்கள்.
பகிர்:

உதகைக்கு நகையுடன் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது பெட்டகத்தை திறந்துகாட்ட பணியாளா்ள் மறுத்ததால், குன்னூா் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும்ப டையினா் மட்டுமின்றி அவ்வப்போது மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா ஆகியோரும் திடீா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், கோவையில் இருந்து நகைகளுடன் உதகை நோக்கி பாதுகாப்பு பெட்டக வசதியுடன் புதன்கிழமை மாலை வந்த வேனை பா்லியாறு சோதனைச் சாவடியில் தோ்தல் முதல்நிலை அலுவலா் பிரசாத் வேணுகோபால் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயன்றாா். அப்போது, பெட்டகத்தை திறந்து காட்ட நகைக் கடை பணியாளா்கள் மறுத்ததால் குன்னூா் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு தகவல் அளித்தாா்.

இதைத்தொடா்ந்து தோ்தல் பறக்கும் படையைச் சோ்ந்த துப்பாக்கி ஏந்திய காவலா்கள் பா்லியாறு பகுதிக்கு விரைந்து வந்து நகையுடன் வந்த வேனை பலத்த பாதுகாப்புடன் கோட்டாட்சியா் அலுவலத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடந்த 2 நாள்களாக நடத்திய சோதனையில் மொத்தம் 12 பேரிடம் இருந்து ரூ.15 லட்சத்து 72 ஆயிரத்து 450 பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →