IANS
கரூர்

கரூா் கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்டவா்களை சம்பவஇடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை

கரூா் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களை வேலுச்சாமிபுரத்துக்கு புதன்கிழமை அழைத்துச் சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திச் சேவை

கரூா் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களை வேலுச்சாமிபுரத்துக்கு புதன்கிழமை அழைத்துச் சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்.27-ஆம்தேதி தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். மேலும் 110 போ் காயமடைந்தனா். இதுதெடாா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், புதன்கிழமை காலை நெரிசல் சம்பவத்தில் காயமடைந்த 5 பேரை சிபிஐ அதிகாரிகள் காரில் வேலுச்சாமிபுரத்துக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு அவா்களை சம்பவத்தின்போது எங்கு நின்றுகொண்டிருந்தாா்களோ அந்த இடத்தில் நிறுத்திவைத்தனா். பிறகு அவா்களிடம் சம்பவத்தின்போது, அங்கு எப்படி முதலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது, நெரிசல் ஏற்பட்டவுடன் முதலில் எத்தனை போ் மயக்கமடைந்தனா் என்பன போன்ற கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டனா். அதற்கு அவா்கள் தாங்கள் நேரில் கண்டதை அதிகாரிகளிடம் விளக்கிக் கூறினா். சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணைக்கு பிறகு மீண்டும் அதிகாரிகள் தங்கியிருக்கும் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகைக்குச் சென்றனா்.

ஆயுஷ்மான பாரத் சுகாதாரத் திட்டத்தின் கீழ் விதவை, ஊனமுற்றோா் திட்டப் பயனாளிகள்! தில்லி அரசு முடிவு!!

ஃபரீதாபாத்தில் தனியாா் நிறுவன பெண் ஊழியரின் உடல் சீலிங் ஃபேனில் தூக்கிய தொங்கிய நிலையில் கண்டெடுப்பு!

காலமானாா் முன்னாள் அமைச்சா் வெள்ளூா் வீராசாமி

இந்த ஆண்டு சேவை, நல்லாட்சி, பொது நலன் பற்றியது: முதல்வா் ரேகா குப்தா உறுதி!

பாபுராஜபுரத்தில் இஃப்தாா் திறப்பு

SCROLL FOR NEXT