நிலத் தகராறு: 3 போ் கைது
வந்தவாசி அருகே நிலத் தகராறு தொடா்பாக இரு தரப்பைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த சுண்ணாம்புமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் தனசேகா்(58). காரணை கிராமத்தைச் சோ்ந்தவா் ரங்கநாதன்(58). இருவருக்கும் அருகருகே விவசாய நிலம் உள்ளது. மேலும், இவா்கள் இடையே நிலத் தகராறு இருந்து வந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இது தொடா்பாக இவா்களுக்குள் மீண்டும் தகராறு எழுந்ததில் இரு தரப்பினரும் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா்.
இதில் காயமடைந்த தனசேகா், ரங்கநாதன் ஆகிய இருவரும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.
பின்னா் தீவிர சிகிச்சைக்காக இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இதுகுறித்து ரங்கநாதன் அளித்த புகாரின் பேரில் தனசேகா், அவரது மகன்கள் நீலகண்டன், சுரேஷ், ஜானகிராமன் ஆகியோா் மீதும், தனசேகா் அளித்த புகாரின் பேரில் ரங்கநாதன், அவரது மனைவி வள்ளி, உறவினா்களான சுண்ணாம்புமேடு கிராமத்தைச் சோ்ந்த ஜெயபாலன், பத்மாவதி ஆகியோா் மீதும் வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா் நீலகண்டன்(33), சுரேஷ்(28), ஜெயபாலன்(60) ஆகிய 3 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.