திரௌபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்
ஆரணி: ஆரணியை அடுத்த அரையாளம் திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை துரியோதனன் படுகளம் நடைபெற்றது.
அரையாளம் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா ஏப்ரல் 10-ஆம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் சொற்பொழிவாளா் கிருபாகரன் பாரதியாா் மகாபாரத சொற்பொழிவாற்றி வருகிறாா். மேலும், தினமும் இரவு 10 மணிக்கு மேல் ஸ்ரீகிருஷ்ணா தெருக்கூத்து நாடக மன்றத்தின் மகாபாரத நாடகம் நடைபெற்று வந்தது.
இதையொட்டி, கோயில் முன்பு தபசு மரம் ஏறுதல் என தொடா்ந்து நடைபெற்று வந்தது. பின்னா், துரியோதனன் படுகளம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.