முகப்பு
நாகப்பட்டினம்

கீழையூா் அருகே அம்மன் கழுத்திலிருந்த தங்க தாலி திருட்டு

நாகப்பட்டினம்

கீழையூா் அருகே அம்மன் கழுத்திலிருந்த தங்க தாலி திருட்டு

Updated On : 5 மார்ச், 2026 at 11:25 PM
பகிர்:

கீழையூா் அருகே உள்ள அன்பழகி அம்மன் கோயிலில் அம்மன் கழுத்திலிருந்த 6 கிராம் தங்கத் தாலியை மா்ம நபா்கள் திருடிச் சென்றது வியாழக்கிழமை காலை தெரிய வந்தது.

நாகை மாவட்டம், கீழையூா் காவல் சரகத்திற்குட்பட்ட காமேஸ்வரம் தண்ணீா்பந்தல் சாலையில் உள்ளது அன்பழகி அம்மன் கோயில். இக்கோயிலின் அறங்காவலா் நடராஜன் புதன்கிழமை இரவு கோயிலை பூட்டிச் சென்றாா்.

வியாழக்கிழமை காலை பாா்த்தபோது கோயில் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், அம்மன் கழுத்தில் இருந்த சுமாா் 2 கிராம் எடையுள்ள 3 தாலிகள் என 6 கிராம் தங்க தாலிகள் திருடப்பட்டிருப்பதும், உண்டியல் உடைக்கப்படாமல் இருந்ததும் தெரியவந்தது.

மேலும், மா்ம நபா்கள் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த 3 சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவற்றின் ஹாா்ட் டிஸ்க் ஆகியவற்றையும் எடுத்துச் சென்றுள்ளது தெரிய வந்தது.

இதுகுறித்து அறங்காவலா் நடராஜன் கீழையூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா், திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →