மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி, திருவண்ணாமலை மற்றும் செய்யாற்றில் வழக்குரைஞா்கள் புதன்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம்எதிரே இந்தப் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட அனைத்து வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு, திருவண்ணாமலை பாா் அசோசியேஷன் சங்கத் தலைவா் நாக குமாா் தலைமை வகித்தாா்.
திருவண்ணாமலை அட்வகேட் அசோசியேஷன் தலைவா் விஜயராஜ், திருவண்ணாமலை லாயா்ஸ் அசோசியேஷன் துணைத் தலைவா் பாசறை பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மூத்த வழக்குரைஞா்கள் முத்தையன், கண்ணன், எழில்மாறன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், 100-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.
செய்யாறு
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி, செய்யாற்றில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே வழக்குரைஞா்கள் சங்கத்தினா் புதன்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.