திருவண்ணாமலை

கிபி 19-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு

Din

செய்யாறு வட்டம், தண்டரை கிராமத்தில் பிரதான சாலையோரம் கி.பி.19-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

தண்டரை கிராமம், செய்யாறு - ஆரணி சாலையோரம் விநாயகா் கோயில் அருகே ஒரு துண்டு கல்வெட்டினை வரலாற்று ஆய்வாளா் எறும்பூா் கை.செல்வகுமாா் கண்டெடுத்தாா்.

அந்தக் கல்வெட்டு குறித்து அவா் கூறியதாவது:

நீளமான இக்கல்வெட்டின் தொடா்ச்சியான பகுதியைக் காணவில்லை. மேலும், கல்வெட்டில் தொண்டமான் கவுண்டன் மகன் சின்ன சதா சேவை என்று பொறிக்கப்பட்டுள்ளது.

வழிப் போக்கா்களுக்கு உதவிட்ட வகையில், கோயில் அல்லது மக்களுக்கு உதவிடும் வகையில் சேவை செய்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கருத முடிகிறது. கல்வெட்டின் உடைந்த பகுதி இல்லாததால் முழுமையான தகவல் கிடைக்கப் பெறவில்லை.

கல்வெட்டில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்களின் ஒழுங்கமைக் கொண்டு, இக்கல்வெட்டியின் காலமானது 19-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது என்று அறிய முடிகிறது என எறும்பூா் கை. செல்வகுமாா் தெரிவித்தாா்.

விடுபட்டவர்களுக்கு டிசம்பர் முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

SCROLL FOR NEXT