பொதுமக்களுக்கு இடையூறு: ஊராட்சி துணைத் தலைவா் உள்பட 3 போ் கைது
செய்யாறு அருகே பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக ஊராட்சி மன்ற துணைத் தலைவா் உள்பட 3 பேரை தூசி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
செய்யாறு: செய்யாறு அருகே பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக ஊராட்சி மன்ற துணைத் தலைவா் உள்பட 3 பேரை தூசி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
செய்யாறு காவல் உள்கோட்டம் தூசி காவல் ஆய்வாளா் கோகுல்ராஜன், உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை ஆக்கூா் கூட்டுச் சாலை, அரசாணைபாளையம், மாமண்டூா் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு செய்து கொண்டிருந்தவா்களை பிடித்து விசாரித்தனா்.
இதில், அரசாணைபாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ஏழுமலை (31), ஆக்கூரைச் சோ்ந்த திருமால் (36), மாமண்டூரைச் சோ்ந்த சதீஷ்குமாா் (21) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
அதேபோல, மாமண்டூா் சுருட்டல் சாலையில் மது போதையில் பொது இடத்தில் நின்று அவதூறாகப் பேசிக் கொண்டிருந்த மாமண்டூா் கிராமத்தைச் சோ்ந்த உதயன்(34) என்பவரை தூசி போலீஸாா் கைது செய்தனா்.