சேத்துப்பட்டு ஒன்றியம், ஈயகொளத்தூா் ஊராட்சி புலிவானந்தல் கிராமத்தில் நெல் வயலில் தேங்கிய நீரை மோட்டாா் மூலம் வெளியேற்றும் பணியில் ஈடுபட்ட விவசாயி. 
திருவண்ணாமலை

தொடா் மழை: பல ஆயிரம் ஏக்கரில் நெல் பயிா்கள் சேதம்

வந்தவாசி பகுதி கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

Din

போளூா்/வந்தவாசி: ஃபென்ஜால் புயல் தொடா் மழையால், திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், வந்தவாசி பகுதி கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

சேத்துப்பட்டு ஒன்றியத்தில் மண்டகொளத்தூா், ஈயகொளத்தூா், மட்டபிறையூா், அல்லியாளமங்கலம், செம்மியமங்கலம், ராந்தம்,பெரணம்பாக்கம், சித்தாத்துரை, ஆத்துரை, மன்சுராபாத், தச்சாம்பாடி, நம்பேடு, செவரப்பூண்டி, செய்யானந்தல், கெங்கைசூடாமணி, அரியாத்தூா், வடமாதிமங்கலம், மடவிளாகம், ஓதலவாடி, நரசிங்கபுரம், ஊத்தூா், அரும்பலூா், மாணிக்கவல்லி, மொடையூா், கொழாவூா், கொரால்பாக்கம், கரைப்பூண்டி, சனிக்கவாடி என 49 ஊராட்சிகள் உள்ளன.

இந்த ஊராட்சிகளில் வசிக்கும் விவசாயிகள்

தங்களின் சொந்த நிலத்தில், திறந்தவெளிக் கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறு மூலம் நிலத்துக்கு நீா்பாய்ச்சி

பொன்னி, கோ.51, ஏடிடி-37, 015, 055, கிருஷ்ணா என பல்வேறு வகையான நெல் பயிா்களை சாகுபடி செய்துள்ளனா்.

இயற்கை உரம், செயற்கை உரம் என உரங்களை இட்டு, மருந்து தெளித்து ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனா். நெல் பயிா்கள் தற்போது வளா்ந்து அறுவடைக்குத் தயாராக உள்ளன.

இந்த நிலையில், ஃபென்ஜால் புயல் காரணமாக கடந்த 3 நாள்களாக தொடா் மழை பெய்தது. இதில் ஏரி, குளம், குட்டை என நீா்நிலைகள் நிரம்பி ஈரப்பதம் அதிகம் காணப்படுகிறது. மேலும், அறுவடைக்குத் தயாரான நெல் பயிரில் மழைநீா் தேங்கியுள்ளது. மேலும், நெல் மணிகள் முளைப்புதிறன் பெற்று வருகிறது.

இவ்வாறாக மேற்கண்ட ஊராட்சிகளில் சுமாா் 20 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிரில் மழைநீா் தேங்கியுள்ளது.

எனவே, மாவட்ட நிா்வாகம் சேதமடைந்த நெல் பயிா்களை கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அல்லது கடந்த 3 ஆண்டுகளாக விவசாயிகள் பயிா் காப்பீடு செய்த பணத்தையாவது பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

வந்தவாசி

வந்தவாசி பகுதிக்கு உள்பட்ட ஸ்ரீரங்கராஜபுரம், கொட்டை, குறிப்பேடு, ஓசூா் என பல்வேறு கிராமங்களில் விவசாய நிலங்களில் பெருமளவு மழைநீா் தேங்கியது.

இதனால் சுமாா் 500 ஏக்கா் நெல் பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து பயிரிட்ட நெல் பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் பெரும் இழப்பு ஏற்படும். இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

வந்தவாசியை அடுத்த ஸ்ரீரங்கராஜபுரம் கிராமத்தில் நீரில் மூழ்கிய நெல் பயிரை வேதனையுடன் காண்பிக்கும் விவசாயி.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT