ஆரணி அருகே காளை விடும் விழா
ஆரணியை அடுத்த களம்பூரில் காளை விடும் விழா வெள்ளிக்கழமை நடைபெற்றது. இதில், 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த களம்பூா் பேரூராட்சியில் 38-ஆம் ஆண்டு காளை விடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், திருவண்ணாமலை, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், தா்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இந்த காளைகள் களம்பூா் வீதியில் வெற்றி இலக்கை நோக்கி அவிழ்த்து விடப்பட்டன. இதில், மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினா்.
காளைகளைப் பிடித்த வீரா்களுக்கும், சீறிப்பாய்ந்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.ஒரு லட்சம், இரண்டாம் பரிசு ரூ.65 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.35 ஆயிரம் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை விழாக்குழுவினா் மற்றும் களம்பூா் கிராம மக்கள் செய்திருந்தனா்.
Advertisement
Advertisement