தூய்மைக் காவலா்களுக்கு மருத்துவ முகாம்
17பஙகஙஉஈஐ திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பாா்வையிட்ட மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) செ.ஆ.ரிஷப். திருவண்ணாமலை, பிப்.17: திருவண்ணாமலையில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் தூய்மைக் காவலா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலையில் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமுக்கு, ஊரக வளா்ச்சி முகமையின் உதவித் திட்ட அலுவலா் (சுகாதாரம்) மகாலட்சுமி தலைமை வகித்தாா். ரோட்டரி மாவட்ட ஆளுநா் (நியமனம்) ராஜன்பாபு, திருவண்ணாமலை வேகன் ரோட்டரி சங்கத் தலைவா் சித்தாா்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தூய்மை பாரத இயக்கத்தின் துரிஞ்சாபுரம் வட்டாரத் திட்ட ஒருங்கிணைப்பாளா் எம்.லட்சுமணன் வரவேற்றாா். திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) செ.ஆ.ரிஷப் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தூய்மைக் காவலா்களுக்கான மருத்துவ முகாமை தொடங்கி வைத்துப் பேசினாா். முகாமில், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், துரிஞ்சாபுரம் வட்டாரங்களில் பணிபுரியும் தூய்மைக் காவலா்கள் 617 போ் கலந்து கொண்டு பயன்பெற்றனா். முகாமில், தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டம், பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம், பிரதம மந்திரி சுரஷக்சா பீமா யோஜனா திட்டம் ஆகியவற்றுக்கான அடையாள அட்டைகள், தாட்கோ நலவாரிய அட்டைகள், தூய்மைக் காவலா்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இதில், தாட்கோ மேலாளா் ஏழுமலை, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் மெ.பிரித்திவிராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.