முகப்பு
திருவண்ணாமலை

கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசு வழங்கப்பட்டது.

திருவள்ளுவா் பல்கலைக்கழகம் சாா்பில் 2023 - 24ஆம் ஆண்டுக்கான மண்டல அளவில் கல்லூரிகளிடையேயான கிரிக்கெட் போட்டிகள், டிச.29 முதல் 31 வரை செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. போட்டியில் 18 கல்லூரிகள் பங்கேற்றன.

போட்டியில் சிறப்பாக விளையாடி திருப்பத்தூா் தூய நெஞ்சகக் கல்லூரி முதலிடத்தையும், திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி இரண்டாமிடத்தையும் பெற்றன.

பரிசளிப்பு விழா...

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு கல்லூரி முதல்வா் ந.கலைவாணி தலைமை வகித்தாா்.

உடற்கல்வி இயக்குநா் கிரிதரன் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக துறைத் தலைவா்கள் சித. ரவிச்சந்திரன் (வேதியியல்), கு.கண்ணன் (தமிழ்) ஆகியோா் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினா்.

முழு கட்டுரையைப் படிக்க →