எல்பிஜி தட்டுப்பாடு: திருப்பதியில் லட்டு தயாரிப்பதைப் பாதிக்குமா?
திருப்பதி கோயிலில் லட்டு விநியோகம் பற்றி..
நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு உள்ள நிலையில் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிப்பதில் சிக்கல் ஏற்படுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்தி வரும் தாக்குதல் 13-ஆவது நாளைக் கடந்திருக்கும் நிலையில், உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை வந்துள்ளது. ஏற்கெனவே பெங்களூர், மும்பை உள்ளிட்ட இடங்களில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் மூடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
எரிபொருள் தட்டுப்பாடு மட்டுமின்றி அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் கூட பற்றாக்குறை நிலவும் போக்கு ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் லட்டு தயாரிப்பு மற்றும் அன்னதாணத்திற்கு எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து தேவஸ்தான அதிகாரி ஒருவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தேவஸ்தான அதிகாரி கூறுகையில்,
திருமலையில் நாள்தோறும் சராசரியாக நான்கு லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. அதே நேரத்தில், திருவிழா காலங்களில் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 லட்சமாக உயரும்.
திருமலையில் லட்டு தயாரிப்பு மற்றும் அன்னதானக் கூடத்துக்கு மொத்த சமையல் எரிவாயு தேவை நாளொன்றுக்கு 10 டன்களுக்கு மேல் தேவைப்படுகிறது.
அந்தவகையில் திருமலையில் சமையல் எரிவாயு விநியோகத்தில் எந்தவித பற்றாக்குறையும், இடையூறும் இதுவரை இல்லை. பக்தர்கள் வழக்கம்போல் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் லட்டுகளை வாங்கிச் செல்கின்றனர்.
ஏழுமலையான் பிரசாதமாக வழங்கப்படும் சிறிய லட்டு முதல் பக்தர்கள் வாங்கிச் செல்லும் லட்டு, அன்ன பிரசாதங்கள் தடையின்றி தயாரிக்க உறுதி செய்வதற்காக, கோயில் நிர்வாகம் அடுத்த ஒரு வாரத்திற்கு போதுமான சமையல் எரிவாயுவைப் பராமரித்து வருவதாக அதிகாரி கூறினார்.
லட்டு விநியோகத்தில் முன்னுரிமை முதலில் திருமலைக்கு வழங்கப்பட்டு, பின்னர் தேவஸ்தான தகவல் மையங்கள் மற்றும் முக்கியமான கோயில்களுக்கு வழங்கப்படுகிறது.
இதேபோல், திருப்பதி லட்டு தயாரிப்பு மற்றும் பிரதான அன்னதான மையத்திற்குக் குழாய் மூலம் எரிவாயு விநியோகத்தைப் பயன்படுத்துகிறது, அதே நேரத்தில் சிலிண்டர்கள் மற்ற அன்னதான அலகுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
நாளொன்றுக்குச் சராசரியாகப் பிரதான அன்னதான மையத்தில் கிட்டத்தட்ட 75,000 பேருக்கு உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் சுமார் 2.25 லட்சம் உணவுகள் அனைத்து மையங்களிலும் வழங்கப்படுகின்றன.
திருவிழா நாள்களில் அன்னதான மையங்களில் தயாரிக்கப்படும் உணவுகளின் எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என கோயில் அதிகாரி கூறினார்.
The TTD on Thursday said that there is no disruption in the supply of cooking gas to its 'laddu' and Annadanam kitchens.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.