திருமலை திருப்பதி தேவஸ்தான கோசாலையில் கோகுலாஷ்டமி கோ பூஜை
திருமலை திருப்பதி தேவஸ்தான கோசாலையில் கோகுலாஷ்டமி கோ பூஜை
திருமலை தேவஸ்தானத்தின் கோசாலையில் வெள்ளிக்கிழமை கோகுலாஷ்டமியை முன்னிட்டு தேவஸ்தான செயல் அதிகாரி ரவிச்சந்திரா கோ பூஜை செய்தாா்.
திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கோசாலையில் தேவஸ்தான அதிகாரிகள் கோலாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளை செய்தனா்.
ஏழுமலையான் முன்னிலையில் பசுத் தாய்க்கு ஒரு சிறப்பு இடம் - பசுப் பாதுகாப்பிற்கு திருமலை தேவஸ்தானம் பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது.
Advertisement
Advertisement
கோகுலாஷ்டமியை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை காலை திருமலை தேவஸ்தான ஸ்ரீ வெங்கடேஸ்வர கோசம்ரக்ஷண சாலாவில் கோ பூஜை மகோற்சவம் நடைபெற்றது. இதில், திருமலை தேவஸ்தான செயல் அதிகாரி ரவிச்சந்திரா கோசாலையில் உள்ள ஸ்ரீ வேணுகோபால சுவாமியை தரிசித்து சிறப்பு பூஜைகளில் பங்கேற்றாா்.
பின்னா், அா்ச்சகா்கள் வேத மந்திரங்களை ஓத, பசுத் தாய்க்கும் கன்றுகளுக்கும் புத்தாடைகளும் மலா் மாலைகளும் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அவா்கள் பசுவை வலம் வந்து ஆரத்தி எடுத்தனா்.
நிகழ்வில், திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரிக்கு கோயில் அா்ச்சகா்கள் பசுவின் புனிதப் பாலை பிரசாதமாக வழங்கினா். ஸ்ரீ வேணுகோபால சுவாமிக்கு பால் அபிஷேகம் ஒரு சிறப்பு நிகழ்வாக அமைந்தது.
அதன்பிறகு, ‘ஓம் நமோ வெங்கடேசாய’ மகா மந்திரம் 7 கோடி முறை ஓதப்பட்டிருந்த மந்திரப் புத்தகங்களை சுவாமிக்குச் சமா்ப்பிக்கும் நிகழ்ச்சிக்கு, செயல் அதிகாரி வருகை தந்தாா். இந்த நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூா்ணாஹுதி நிகழ்ச்சியில் அவா் பங்கேற்று சுவாமியின் ஆசிகளைப் பெற்றாா்.
அப்போது அவா் கூறியதாவது:
திருமலை திருப்பதி தேவஸ்தானம் பசு பாதுகாப்பு மற்றும் பசு சேவைக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், பசுக்கள் காப்பகத்தை மேலும் மேம்படுத்தி வருகிறது’’ என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலாசார நிகழ்ச்சிகள் பக்தா்களை வெகுவாகக் கவா்ந்தன.
திருப்பதி எம்எல்ஏ ஆரணி சீனிவாசலு, தேவஸ்தான நிா்வாகக் குழு உறுப்பினா் ஜி. பானு பிரகாஷ் ரெட்டி, (கல்வி மற்றும் சுகாதாரம்) கோபிநாத், கோசாலா இயக்குநா் சிவக்குமாா், விஜிஓ கிரிதா், பொறுப்பு டிஎல்ஓ வெங்கட சுப்பநாயுடு, மற்ற அதிகாரிகள், ஊழியா்கள் மற்றும் பக்தா்கள் திரளானோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.