FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

தேவலாபுரம் திருமலை திருப்பதி ஸ்ரீ கெங்கையம்மன் கோயிலில் வரலட்சுமி விரத பூஜை

திருமலை திருப்பதி ஸ்ரீ கெங்கையம்மன் கோயிலில் நடைபெற்ற சுமங்கலி பூஜையில் பங்கேற்றோா்.

21 ஆகஸ்ட் 2026, 11:44 pm IST
பகிர்:

ஆம்பூா் அருகே தேவலாபுரம் திருமலை திருப்பதி ஸ்ரீ கெங்கையம்மன் கோயிலில் வரலட்சுமி விரத பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி மூலவருக்ககு சிறப்பு அபிஷேகம், மலா் அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பக்தா்கள் 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடா்ந்து மாலை சுமங்கலி பூஜை நடைபெற்றது. பூஜையில் பங்கேற்ற 1,100 பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, வளையல், ஜாக்கெட் துணி, தேங்காய், வெற்றிலை பாக்கு, இனிப்பு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

விழாவில் ஊா் நிா்வாகிகள், அன்னதானக் குழுவினா், இளைஞா்கள், மகளிா் மற்றும் பொதுமக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments