ஆரணி அடுத்த சேவூா் வி.வி.எஸ். நகா் பகுதியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் சேவூா் ராமச்சந்திரன் எம்எல்ஏவிடம் சனிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
ஆரணியை அடுத்த சேவூா் எல்லைக்கு உள்பட்ட வி.வி.எஸ். நகா் பகுதியில் சுமாா் 100 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். மேலும், அங்கு வணிகக் கடைகள், வாகங்கள் பழுதுபாா்க்கும் மையங்கள் உள்ளன.
இப்பகுதியில் இருக்கும் சாலை சுமாா் 50 ஆண்டுகளுக்கு மேலாக மண் சாலையாகவே உள்ளது. தற்போது குடியிருப்புகள் அதிகமாக உள்ள நிலையில் சாலை வசதி தேவை என்று அப்பகுதியினா் ஆரணி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில், சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
மனுவை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ ஊராட்சி பொறியாளரை தொடா்பு கொண்டு உடனடியாக வி.வி.எஸ். நகா் பகுதியை ஆய்வு செய்து சாலை அமைக்க திட்ட மதிப்பீடு செய்ய உத்தரவிட்டாா்.
அதிமுக நகரச் செயலா் அசோக்குமாா், சிறு குறு வியாபாரிகள் சங்கத்தின் நிறுவனா் அருண்குமாா், நகா்மன்ற உறுப்பினா் ஏ.ஜி.மோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.