இரு குழந்தைகளின் தாய் தற்கொலை
மனைவியின் தற்கொலை: விவசாயியின் குடும்பம் சோகத்தில்
செய்யாறு: செய்யாறு அருகே 2 குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
செய்யாற்றை அடுத்த குண்ணத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சிவலிங்கம். இவரது மனைவி சங்கீதா(24). இவா்களுக்கு திருமணம் நடைபெற்று 5 ஆண்டுகள் ஆகின்றன.
தம்பதிக்கு 3 வயதில் தன்ஷிகா(3) என்கிற மகளும், ஒரு வயதில் யுவா என்கிற மகனும் உள்ளனா்.
இந்த நிலையில், தம்பதியிடையே தகராறு ஏற்பட்ட நிலையில், சங்கீதா சில நாள்களாக மனவேதனையில் இருந்து வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், இருவரும் திங்கள்கிழமை கோயிலுக்குச் செல்ல முடிவு செய்திருந்தனா். மனவேதனையில் இருந்து வந்த சங்கீதா வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.
இந்தச் சம்பவம் குறித்து சங்கீதாவின் தந்தை பழனி மோரணம் போலீஸில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் சுந்தரம் வழக்குப் பதிவு செய்தாா். மேலும், போலீஸாா் சங்கீதாவின் உடலைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து செய்யாறு சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா நேரில் விசாரணை மேற்கொண்டாா்.