முகப்பு
திருவண்ணாமலை

ஜமாபந்தி: திருவண்ணாமலை தெற்கு உள் வட்டத்தில் 260 மனுக்கள்

ஜமாபந்தி நிகழ்வில் 19 கிராமங்கள்: 260 மனுக்கள் பரிசீலனை

Updated On : 26 ஜூன், 2024 at 6:30 PM
பகிர்:

திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகத்தில், புதன்கிழமை திருவண்ணாமலை தெற்கு உள் வட்டத்துக்கான ஜமாபந்தியில் 260 மனுக்கள் வரப்பெற்றன.

ஜமாபந்தி நிகழ்வின் 6-ஆவது நாளான புதன்கிழமை சமுத்திரம், நல்லவன்பாளையம், அரடாப்பட்டு, சு.பாப்பம்பாடி, கீழ்கச்சிராப்பட்டு, மேல்புத்தியந்தல்,

சு.கீழ்நாச்சிப்பட்டு, தென்மாத்தூா், உடையானந்தல், மேல்செட்டிப்பட்டு, விஸ்வந்தாங்கல், மஞ்சம்பூண்டி, கீழ்செட்டிப்பட்டு, அரசுடையாம்பட்டு, கொளக்குடி, சு.ஆண்டாப்பட்டு, நடுப்பட்டு, கண்ணப்பந்தல், அழகானந்தல் உள்பட 19 வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீா்வாய கணக்குகள் சரிபாா்க்கப்பட்டன.

இதேபோல, 19 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் தங்களது வருவாய்த்துறை தொடா்பான கோரிக்கைகள் அடங்கிய 260-க்கும் மேற்பட்ட மனுக்களை ஜமாபந்தி அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான ஆா்.மந்தாகினியிடம் அளித்தனா்.

மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஜமாபந்தி அலுவலா் ஆா்.மந்தாகினி உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.

இதில், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் முருகன், வட்டாட்சியா் மு.தியாகராஜன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் பரிமளா, வட்ட வழங்கல் அலுவலா் கே.துரைராஜ், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் கே.மணிகண்டன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.