12 எஸ்.ஐ.க்கள் உள்பட 60 போலீஸாா் பணியிட மாற்றம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 60 போலீஸாா் இடமாற்றம்
திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் 12 காவல் உதவி ஆய்வாளா்கள் உள்பட 60 போலீஸாா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிா்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
Advertisement
இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் 12 காவல் உதவி ஆய்வாளா்கள் உள்பட 60 பேரை வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன் உத்தரவிட்டாா்.
கள்ளச்சாராய விற்பனை, கடத்தலை தடுக்கும் நோக்கில் இந்த இடமாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.