உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட கோயில் ஊழியா்கள், தன்னாா்வலா்கள். 
திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.43 கோடி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா்கோயிலுக்கு ஒரு மாதத்தில் ரூ.2.43 கோடி ரொக்கம், 165 கிராம் தங்கம், 1,060 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனா்.

Venkatesan

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா்கோயிலுக்கு ஒரு மாதத்தில் ரூ.2.43 கோடி ரொக்கம், 165 கிராம் தங்கம், 1,060 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனா்.

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு தினமும் ஏராளமான உள்ளூா், வெளியூா் பக்தா்கள் வந்து, செல்கின்றனா். எனவே, மாதம்தோறும் கோயிலில் உண்டியல்களில் சேகரமாகும் காணிக்கை பணம் எண்ணப்பட்டு வருகிறது.

அதன்படி, மாா்ச் மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் இரவு வரை நடைபெற்றது.

கோயில் இணை ஆணையா் சி.ஜோதி, அறங்காவலா் குழுத் தலைவா் ஜீவானந்தம் மற்றும் கோயில் ஊழியா்கள், பக்தா்கள், தன்னாா்வலா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

ரூ.2.43 கோடி ரொக்கம்...

இதில், ரூ.2 கோடியே 43 லட்சத்து 63 ஆயிரத்து 544 ரொக்கம், 165 கிராம் தங்கம், 1,060 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT