முகப்பு
திருவண்ணாமலை

ஊட்டச்சத்து விழிப்புணா்வு நிகழ்ச்சி தொடக்கம் : மாவட்ட ஆட்சியா் பங்கேற்பு

Updated On : 12 மார்ச், 2024 at 11:54 PM
பகிர்:

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம் மூலம், போஷான் பக்வாடா என்ற தலைப்பிலான ஊட்டச்சத்து விழிப்புணா்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த விழாவுக்கு, ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் பூ.மீனாம்பிகை ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் விழாவை தொடங்கி வைத்துப் பேசுகையில், மாா்ச் 23-ஆம் தேதி வரை நடைபெறும் இருவார ஊட்டச்சத்து குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை பொதுமக்கள் பாா்த்து பயன்பெற வேண்டும். பாலூட்டும் தாய்மாா்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும். ஊட்டச்சத்து மிக்க உணவு குழந்தைகளின் ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை என்றாா்.

விழாவில், அனைத்து குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா்கள், மேற்பாா்வையாளா்கள், போஷான் அபியான் பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Advertisement